கனடாவில் 4 ஆயிரத்தைக் கடந்தது கொரோனா உயிரிழப்பு!

You are currently viewing கனடாவில் 4 ஆயிரத்தைக் கடந்தது கொரோனா உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 4 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக பிந்திய தகவல்கள் கூறுகின்றன.

கனடாவில் நேற்று புதிதாக தொற்றுக்குள்ளான 1,298 பேரையும் சேர்ந்து இதுவரையில், 62,046 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இவர்களில், 4,043 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கியூபெக்கில், நேற்று தொற்றுக்குள்ளான 758 பேரையும் சேர்த்து, இதுவரை 33,417 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இங்கு அதிகபட்சமாக, 2,398 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒன்ராறியோவில், 370 பேருக்கு நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களையும் சேர்த்து, 18,310 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில், 1,361 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள