கனரக வாகனம் மோதியதில் விபத்து 3 பேர் காயம்!

கனரக வாகனம் மோதியதில் விபத்து 3 பேர் காயம்!

கிளிநொச்சி – பூநகரி மட்டுவில் நாடு பகுதியில் நேற்று மாலை டிப்பர் வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் ஒன்று யாழ்ப்பாணத்தை நோக்கிப் பயணித்த போது மட்டுவில் நாடு பகுதியை நோக்கி அதிவேகமாக பணித்த டிப்பர் வாகனம் கட்டுபாட்டை இழந்த நிலையில் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் டிப்பர் வாகனத்தில் பயணித்த சாரதி காயங்களுக்குள்ளான நிலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் காயங்களுக்குள்ளானதா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments