கரும்புலிகள் நாள் அச்சம் வடக்கில் படையினர் குவிப்பு சுற்றிவளைப்புக்கள் கைதுகள்!

கரும்புலிகள் நாள் அச்சம் வடக்கில் படையினர் குவிப்பு சுற்றிவளைப்புக்கள் கைதுகள்!

வடக்கில் தமிழ்மக்கள் கரும்புலிகள் நாளினை நினைவிற்கொள்வார்கள் என்ற அச்சத்தில் படையினர் மற்றும் புலனாய்வாளர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவதுடன் வீதிச்சோதனை நடவடிக்கையினை அதிகரித்துள்ளார்கள்.

யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகம் சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

நண்பகல் முதல் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கரும்புலிகள் நாள் நிகழ்வுகள் நடைபெறலாம் என்ற சந்தேகம் காரணமாக குறித்த சுற்றிவளைப்பு இடம்பெறலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

5 2 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments