பாடசாலைகளில் இலத்திரனியல் சாதனங்களின் பயன்பாடு மாணவர்களிடையே கவனச்சிதறலை ஏற்படுத்துவதாகக் கண்டறிந்த சுவீடன் அரசு, கற்றல் நடவடிக்கைகளில் இலத்திரனியல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பாடசாலைகளில் தொடுதிரை கைப்பேசிகளுக்கு தடை விதித்துள்ளது.
அதேவேளை, பாரம்பரிய கற்றல் முறையின்படி புத்தகங்கள், எழுதுகோல்கள் மற்றும் பிற கற்றல் கருவிகளைப் பயன்படுத்தி கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதே சிறந்த வழிமுறையாகும் என கல்வி ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.
மேலும், “கல்வியை நவீனப்படுத்துகிறோம்” என்ற பெயரில் இலத்திரனியல் தொழில்நுட்பங்களை அளவுக்கு மீறி கற்பித்தலில் இணைப்பது, மாணவர்களின் சிந்தனைத் திறன் வளர்ச்சியையும் கையெழுத்துத் திறனையும் மந்தப்படுத்தக்கூடும் என அவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில், சுவீடன் போன்ற நாடுகள் கற்றல் செயல்முறையில் முழுமையான இலத்திரனியல் சார்பைத் தவிர்த்து, அதன் பயன்பாட்டிற்கு கட்டுப்பாடுகளை விதித்திருப்பது கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.
11.06.2026






