யார் இந்த ராஜினி திராணகம ? ஏன் கொ*ல்லப்பட்டார்.
கலாநிதி ராஜினி திராணகம இலங்கையைச் சேர்ந்த ஒரு முக்கிய மனித உரிமை செயற்பாட்டாளர், பெண் உரிமை ஆர்வலர் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவப் பீடத்தின் உடலியல் துறைப் பேராசிரியை.
இலங்கை உள்நாட்டுப் போரின் போது, தமிழ் மக்களுக்கு எதிரான அரச வன்முறைகள், இந்திய அமைதிப்படையின் மனித உரிமை மீறல்கள் மற்றும் தமிழ் ஆயுதக் குழுக்களின் அராஜகங்கள் என அனைத்து தரப்பு வன்முறைகளையும் துணிச்சலாகக் வெளிப்படுத்திய ஒருவர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மனித உரிமைகளுக்கான விரிவுரையாளர்கள் அமைப்பை (UTHR-J) நிறுவுவதில் முக்கியப் பங்காற்றினார்.
செப்டம்பர் 21, 1989 அன்று (தனது 35வது வயதில்) யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து மிதிவண்டியில் வீடு திரும்பும் போது துப்பாக்கியால் சுட்டுக் கொல்*லப்பட்டார்.
ராஜினியின் சகோதரி நிர்மலா ராஜசிங்கம் பு*லிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினராக இருந்தவர். ராஜினி திராணகமவும் லண்டனில் இருந்தபோது புலி*கள் இயக்கத்திற்கு மருத்துவ உதவிகளையும், பிரசார உதவிகளையும் செய்தவர். அவர் இலக்குவைக்கப்பட இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
ராஜினியை கொன்றவர்கள் இந்திய இராணுவத்தினரும் அவர்களோடு சேர்ந்தியங்கிய EPRLF ஆயுதக் கும்பலுமே. EPRLF மற்றும் IPKF ஆகிய தரப்புகளுக்குப் பல காரணங்கள் ராஜினி யை கொல்*வதற்கு இருந்தன என்பதை மறுக்க முடியாது.
ராஜினி திராணகம கொலைக்கு பொறுப்புக் கூற வேண்டிய நபராக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) இன் தலைவர் சுரேஸ் பிறேமச்சந்திரன் இன்று வாழும் சாட்சியாக உள்ளார்.
EPRLF இன் இந்த படு கொ லைகள் பற்றி சுரேஸ் பிறேமச்சந்திரனிடம் விரிவான விசாரணைகள் நடாத்தப்பட்டு பாதிக்கப்பட்டோருக்கு நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டியது அவசியமாகும்.
ராஜினி திராணகம எழுதிய “முறிந்தபனை” எனும் நூலில் EPRLF மற்றும் IPKF அட்டூளியங்கள் தொடர்பாக பின்வரும் முதன்மையான விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அமைதியை ஏற்படுத்த வந்த படை’ என்ற பெயரில் இலங்கை வந்த இந்திய இராணுவம், யாழ் போதனா மருத்துவமனையில் நடத்திய துப்பாக்கிச் சூடு உட்பட பொதுமக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன.
அக்டோபர் 21, 1987 அன்று இந்திய இராணுவத்தினர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குள் புகுந்து நடத்திய கொடூரமான தாக்குதலில், அங்கு பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நோயாளிகள் உட்பட 60-க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ராஜினி தானும் ஒரு மருத்துவராகப் பணியாற்றியவர் என்பதால், மருத்துவமனை வளாகத்தில் நடந்த இந்த படுகொலைச் சம்பவத்தையும், அதில் உயிரிழந்த தனது சக ஊழியர்களின் பெயர்களையும் மிகத் துல்லியமாக ஆவணப்படுத்தினார்.
விடுத*லைப் புலிகளுடனான போரின் போது இந்தியப் படை பயன்படுத்திய கனரக ஆயுதங்கள், ஹெலிகாப்டர் தாக்குதல்கள் மற்றும் எறிகணைச் (Artillery) செலுத்துதல்களால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதையும், காயமடைந்ததையும் அவர்கள் வெளிப்படுத்தினர்.
வீடுகளுக்குள் புகுந்து சோதனையிடுதல் என்ற பெயரில் அப்பாவிப் பொதுமக்களைக் சுட்டுக் கொன்ற சம்பவங்களையும் நூலில் பதிவு செய்துள்ளார்.
இந்திய இராணுவத்தினர் தமிழ் பெண்கள் மீது நடத்திய பாலியல் அத்துமீறல்கள், வன்புணர்வுகள் (Rape) மற்றும் துன்புறுத்தல்கள் குறித்து ராஜினி மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். பெண் உரிமைச் செயற்பாட்டாளராக அவர் இதைப் பகிரங்கமாகக் கண்டித்தார்.
IPKF இலங்கையை விட்டு வெளியேறத் திட்டமிட்ட போது, தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட EPRLF மற்றும் ENDLF அமைப்புகளைப் பயன்படுத்தி தமிழ் இளைஞர்களையும், பாடசாலைச் சிறுவர்களையும் கட்டாயமாகப் பிடித்து TNA (Tamil National Army) என்ற அமைப்பை உருவாக்க துணை நின்றதை ராஜினி கடுமையாக அம்பலப்படுத்தினார்.
விடுத*லையின் பெயரால் தமிழ் ஆயுதக் குழுக்களிடையே குறிப்பாக EPRLF , PLOTE, TNA, ENDLF, TELA, போன்றவர்களிடையே நடந்த உள்குத்துகள், படுகொ*லைகள் மற்றும் தமிழ் மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்தியது குறித்துத் துணிச்சலாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
EPRLF தமிழ் இளைஞர்களையும், பாடசாலைச் சிறுவர்களையும் கட்டாயப்படுத்தித் தங்களது ‘தமிழ் தேசிய இராணுவத்தில்’ (TNA) சேர்த்த கொடுமைகளை ராஜினி மிகக் கடுமையாக எதிர்த்து ஆவணப்படுத்தினார்.
அமைதிப்படை’ என்ற பெயரில் வந்த இந்திய இராணுவம் யாழ் போதனா மருத்துவமனையில் நடத்திய படுகொலைகள், பெண்கள் மீதான வன்புணர்வுகள் போன்றவற்றை உலகிற்கு அம்பலப்படுத்தியதில் ராஜினியின் பங்கு முதன்மையானது.
1998-ல் வெளியான ‘தினமுரசு’ இதழின் ஒரு கட்டுரையில், IPKF அதிகாரி ஒருவரின் உத்தரவின் பேரில் EPRLF அமைப்பைச் சேர்ந்த ஒருவரே ராஜினியைக் கொன்றதாக ஒப்புக் கொண்டதாகச் செய்தி வெளியானது
இதனை விட இலங்கை இராணுவத்தினரால் தமிழ் பொதுமக்கள் மீதும், யாழ்ப்பாணப் பகுதி மீதும் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்கள், வடமராட்சி தாக்குதல் நடவடிக்கை மற்றும் பொதுமக்கள் படுகொ*லைகளும் ராஜினியின் நூலில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
கொழும்பு வெலிக்கடை அதிஉயர் பாதுகாப்புச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் உட்பட 53 தமிழ் அரசியல் கைதிகள் இராணுவத்தினரின் அனுசரணையுடன் சிங்களக் கைதிகளால் கொடூரமாகப் படு*கொலை செய்யப்பட்ட விதம் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கொழும்பு உட்பட தென்னிலங்கையில் தமிழ் மக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டு, ஆயிரக்கணக்கான தமிழர்கள் படு*கொலை செய்யப்பட்டு அகதிகளாக்கப்பட்ட இனக்கலவரத்தின் பின்னணியில் இலங்கை அரசின் நேரடிப் பங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1987 மே மாதத்தில் பருத்தித்துறை மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் இலங்கை இராணுவம் மேற்கொண்ட ‘ஒப்பரேஷன் லிபரேஷன்’ ராணுவ நடவடிக்கையின் போது நடந்த அட்டூழியங்கள் விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நாவற்குழி மற்றும் பருத்தித்துறை பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்தும், வீதிகளிலும் அப்பாவி பொதுமக்கள் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொ*ல்லப்பட்டது. குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் வாழும் குடியிருப்பு பகுதிகள், கோவில்கள் மற்றும் பாடசாலைகள் மீது இராணுவம் நடத்திய குண்டுவீச்சுகளால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பலியானது குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, பூசா போன்ற தடுப்பு முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டமை. குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணக் கோட்டை மற்றும் இராணுவ முகாம்களிலிருந்து சுற்றியுள்ள பொதுமக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி இராணுவம் எவ்வித இலக்குமின்றி ஏவிய எறிகணைத் தாக்குதல்களால் ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானப் படையின் ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் மூலம் வீசப்பட்ட பேரழிவு குண்டுகளால் பாடசாலை மாணவர்கள், சிறுவர்கள் பொதுமக்கள் கொ*ல்லப்பட்ட சம்பவங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் கிராமங்களில் இலங்கை இராணுவத்தினரும், அதிரடிப் படையினரும் (STF) புகுந்து நடத்திய கூட்டுப் படுகொ*லைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
வயல்வெளிகளிலும், கடலிலும் தொழில் செய்து கொண்டிருந்த பொதுமக்கள் ‘பயங்கரவாதிகள்’ எனக் முத்திரையிடப்பட்டு இராணுவத்தால் கொ*ல்லப்பட்ட சம்பவங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள் இராணுவ அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டமை, தன்னிச்சையான கைதுகள் மற்றும் பல்கலைக்கழகச் சொத்துக்கள் அழிக்கப்பட்டது போன்றவை ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது நடத்திய வன்முறைகளை உலகளவில் ஒரு ‘அரச பயங்கரவாதம்’ ஆக அம்பலப்படுத்தியதில் ‘முறிந்த பனை’ நூலுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. தமிழ் மக்கள் ஏன் ஆயுதம் ஏந்த நிர்பந்திக்கப்பட்டார்கள் என்பதற்கான வரலாற்றுச் சூழலையும் இந்நூல் தெளிவாக விளக்குகிறது.
போரின் போது அரச அதிகாரங்களுக்கும் ஆயுதக் குழுக்களுக்கும் இடையே அகப்பட்டுக்கொண்டு, சொந்த மண்ணிலேயே அகதிகளாகவும் பலிகடாக்களாகவும் மாறிய தமிழ் மக்களின் நிஜமான துயரங்களை ராஜினி வெளிப்படுத்தியிருக்கிறார்
போரினால் ஏற்பட்ட உளவியல் மற்றும் சமூக பாதிப்புகள் தொடர் யுத்தம் மற்றும் வன்முறைகள் காரணமாக மக்களிடையே ஏற்பட்ட உளவியல் சிக்கல்கள் சமூக விழுமியங்களின் வீழ்ச்சி மற்றும் நம்பிக்கையின்மை ஆகியவை பற்றி ஆய்வுப் பார்வையுடன் கூறப்பட்டுள்ளது.
போர்க் காலத்தில் தமிழ் பெண்களின் நிலைப்பாடு, அவர்கள் எதிர்கொண்ட வன்முறைகள், அடக்குமுறைகள் மற்றும் விடுத*லைப் போராட்டத்தில் பெண்களின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது என்பது தனி அத்தியாயத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய அமைதிப்படையை உலக அளவில் “அமைதிப் படை” என்று சித்தரித்துக் கொண்டிருந்த இந்திய அரசிற்கு, ராஜினி திராணகம உள்ளிட்ட பேராசிரியர்கள் UTHR-J அமைப்பின் மூலம் வெளியிட்ட அறிக்கை பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.
இதன் காரணமாகவே, ராஜினியைக் கொல்வதற்கு இந்திய உளவுத்துறைக்கும் (RAW) மற்றும் IPKF-ன் ஆதரவு பெற்ற EPRLF அமைப்பிற்கும் மிகப்பெரிய காரணம் இருந்தது. அமைதி, மனித உரிமைகள் மற்றும் பெண் விடு*தலைக்காகத் தனது உயிரையும் பொருட்படுத்தாது குரல்கொடுத்த மிக முக்கியமான சிந்தனையாளர்களுள் ஒருவராக ராஜினி திராணகம நினைவு கூரப்படுகிறார்.
இந்திய இராணுவம் இலங்கை இராணுவம் மற்றும் ஆயுதக்குழுக்கள் என அனைத்துத் தரப்பு அராஜகங்களையும் பயமின்றித் தன் பேனாவால் எதிர்த்த ஒரே காரணத்திற்காகவே ஒரு தலைசிறந்த சிந்தனையாளரைத் தமிழ் சமூகம் இழக்க நேரிட்டது என்பதே கசப்பான உண்மையாகும்.🙏🏾
– ஈழமகள்-






