கலைமாமணி வர்ண ராமேஸ்வரன் அவர்களுக்கு இறுதிவணக்கம்!

You are currently viewing கலைமாமணி வர்ண ராமேஸ்வரன் அவர்களுக்கு இறுதிவணக்கம்!

ஓர் இனத்தின் விடுதலைப்  போரில் கலையும் ஒரு போர்க் கருவியே. அவ்வகையில், தமிழீழத்தில் கலைபண்பாட்டுக்கழகத்துடன் தன்னையும் இணைத்துச் செயலாற்றியவரும், “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே” என்ற மாவீரர் துயிலுமில்லப் பாடலினைப் பாடி உணர்வூட்டியவருமான கலைமாமணி வர்ண ராமேஸ்வரன் அவர்கள், 25.09.2021 அன்று சாவடைந்தார் என்ற செய்தி தமிழ்மக்களையும் கலைஞர்களையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

கலைபண்பாட்டுக்கழகத்துடன் மட்டுமல்லாது, புலிகளின் குரல் வானொலியிலும் பல நிகழ்ச்சிகளுக்குத் தன்குரலால் உயிரூட்டியவராவார். இவர் பாடுவதோடு மட்டுமல்லாமல் தண்ணுமை, வீணை, நரம்பு வாத்தியம் எனப் பல இசைக்கருவிகளையும் மீட்டும் திறன்கொண்ட கலைஞராவார். இவர் கனடாவுக்குப் புலம்பெயர்ந்த நிலையிலும் தனது கலைத்திறன் ஊடாக விடுதலைக்கு உரமூட்டினார்.

கனடாத் தமிழர் கலைபண்பாட்டுக்கழகத்தினது மார்க்கம் நகரக்கிளையின் முன்னைநாள் பொறுப்பாளராகவும் பணியாற்றியவராவார். பொங்குதமிழ், மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வுகளில் இவரின்  பணிகள் இன்றியமையாததாகும். மக்களுக்கான தனது பணியினை உணர்வுடன் செய்த இணையற்ற பன்முகச் செயற்பாட்டாளரைத் தமிழினம் இழந்து நிற்கின்றது.

‘மொழியாகி எங்கள் மூச்சாகி’ எனத்தொடங்கும் “தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே”  என்ற மாவீரர் துயிலுமில்லப் பாடல் உட்பட பல  காலத்தால் அழியாத  ஈழ விடுதலைப்பாடல்களைப் பாடிய இசைப் பறவை  இன்று தன் சிறகுகளின் அசைவை நிறுத்தியுள்ளது.

இவரின்  இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களின் துயரில் நாமும் பங்கெடுத்துக் கொள்வதுடன், தேசியப்பணிபுரிந்த தமிழீழ இசைக் கலைஞரான கலைமாமணி வர்ண ராமேஸ்வரன் அவர்களிற்கு இறுதிவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இசையால் எம் உணர்வைத் துடித்தெழ வைத்த கலைஞனே! காற்று வெளியிடை உங்கள் விடுதலைப்பண்கள் என்றும் இசைக்கும். அவை, எம் மண்ணின் விடுதலைக்கான கதவுகளை அசைக்கும்.

‘‘புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

அனைத்துலகத் தொடர்பகம், 

தமிழீழ விடுதலைப் புலிகள்.

கலைமாமணி வர்ண ராமேஸ்வரன் அவர்களுக்கு இறுதிவணக்கம்! 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments