கவ்வாய் தீவில் சுற்றுலா ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் சாவு!

கவ்வாய் தீவில் சுற்றுலா ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் சாவு!

அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் உள்ள கவ்வாய் தீவு சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. அங்கு சுற்றுலா நிறுவனங்கள் ஹெலிகாப்டர்களை இயக்கி வருகின்றன. கவ்வாய் தீவுக்கு கடந்த 26-ந்தேதி சுற்றுலா வந்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 6 பேர் தீவின் அழகை ரசிப்பதற்காக விமானியுடன் ஒரு ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர்.

அந்த ஹெலிகாப்டர் குறிப்பிட்ட நேரத்திற்குள் திரும்பி வராத காரணத்தால், அதனை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. ஹெலிகாப்டர் கடலில் விழுந்திருக்கலாம் என்று கருதப்பட்டதால் மீட்பு படையினருடன், கடற்படையினரும் சேர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் அங்குள்ள மலை உச்சியில் ஹெலிகாப்டர் நொறுங்கி கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த 6 பேரின் உடல்கள் சிதறிய நிலையில் மீட்கப்பட்டுள்ளன. அவர்களின் உடல்கள் அடையாளம் காணப்படாத நிலையில், ஒருவரை தேடும் பணி தொடர்ந்தது. அவரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments