காங்கேசன்துறையில் 157 கிலோகிராம் கேரள கஞ்சா!

காங்கேசன்துறையில் 157 கிலோகிராம் கேரள கஞ்சா!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பிராந்தியத்தில் சுமார் 157 கிலோகிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை கடற்பிராந்தியத்தின் பல பகுதிகளில் நேற்று (04.02) கடற்படையினரால் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது, கடற்கரைப்பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 43 கிலோ 400 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பகுதியை அண்மித்த 3 இடங்களில் மேற்கொண்ட சோதனையின்போது 113 கிலோ 700 கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

உங்கள் கருத்தை பகிரவும்!

avatar
  குழுசேர  
தெரியப்படுத்த