காசாவில் மனிதாபிமான உதவிகள் வழங்குவதை எளிதாக்குவதற்காக, இன்று முதல் மூன்று பகுதிகளில் நாளாந்தம் 10 மணிநேர தற்காலிக போர் நிறுத்தத்தை அமுல்படுத்துவதாக, இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் அறிவித்துள்ளன.
காசாவில் பரவலான பட்டினி மற்றும் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமைகள் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில்,
நிவாரணப் பணியாளர்கள் பாதுகாப்பாகச் செல்வதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த தற்காலிக போர் நிறுத்தம் தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை, அமுலில் இருக்கும் என இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அறிவித்துள்ளன.






