காணமற்போன இளைஞன் கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியில் மீட்பு!

காணமற்போன இளைஞன் கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியில் மீட்பு!

வடமராட்சி – பருத்தித்துறை பகுதியில் மணல் கடத்தல் காரர்களின் அட்டகாசத்தினால் காணமற்போயிருந்த இளைஞர் ஒருவர் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் வீதியில் மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

நேற்றைய தினம் காணாமற்போன இளைஞன் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் அவரது வீட்டுக்கு அண்மையாக வல்லிபுரக் குறிச்சி வீதியில் இன்று திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் மீட்கப்பட்டுள்ளார்.

இளைஞன் கைகள் கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியில் காணப்பட்டதை கண்ணுற்ற ஒருவர் அவசர அம்புலன்ஸ் சேவைக்கு அழைத்துள்ளார். சம்பவ இடத்துக்குச் விரைந்த அம்புலன்ஸில் இளைஞன் ஏற்றப்பட்டு மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments