காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் போராட்டம்!

You are currently viewing காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் யாழ் அலுவலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை ஐ நா பெற்றுத்தர வேண்டும் எனவும் நீண்ட காலமாக தமது உறவுகளை தேடிய வண்ணம் வீதிகளிலும் மழை,வெயில்களிலும் போராடி வருவதாகவும்

எனினும் தற்போது உள்ள கொரோனா நிலை காரணமாக தாம் போராட்டத்தில் ஈடுபட முடியாத நிலை காணப்படுவதாகவும்

எனினும் தமது பிள்ளைகள் கிடைக்கும் வரை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

யாழ் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி பூங்கோதை தலைமையில் இடம்பெற்ற போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினரின் பெற்றோர் கலந்து கொண்டு தமது பிள்ளைகளை பெற்றுத் தாருங்கள் என கோஷம் எழுப்பினர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments