காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பங்களிப்புடன் கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பங்களிப்புடன் கிளிநொச்சியில் மாபெரும் போராட்டம்!

யாழ் பல்கைக்கழகத்தின் மாணவர்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் பொது அமைப்புகள் பலர் கலந்து கொண்ட சிறிலங்கா சுதந்திரதின எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கிளிநொச்சி கந்தசுவாமி முன்றலில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பு கொடிகளை ஏந்தியவாறு பெப்ரவரி 4 சிறிலங்காவுக்கு சுதந்திரநாள் அது தமிழ் மக்களுக்கு கரிநாள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உள்ளக விசாரணை மூலம் நீதி கிடைக்காது நாட்டின் சுதந்திரம் சிங்களவருக்கு மட்டும்தானா? போன்ற வாசகங்களுடன் போராட்டத்தில் ஈடுப்பட்டு டிப்போச் சந்திவரை ஊர்வலமாக சென்றனர்.

இப் போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன், சுகாஸ், மணிவண்ணன் ஆகியோரும் பல்கலைக்கழக மாணவர்களும், பெருமளவு மக்களும் கலந்துகொண்டனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments