காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடி வந்த மற்றுமொரு தாய் மரணம்!

காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடி வந்த மற்றுமொரு தாய் மரணம்!

இறுதி யுத்தத்தின் போது காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை தேடி வந்த தாய் ஒருவர் நேற்று மரணமானார். முல்லைத்தீவு – விசுவமடுவை சேர்ந்த மைக்கல் யேசுமேரி (வயது-74) என்பவரே உயிரிழந்தவராவார்.

இவருடைய மகன் 2009ம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட நிலையில், மகனை தேடி அனைத்து முகாம்களுக்கும் சென்று தேடியும், இறுதி வரை மகனை கண்டுபிடிக்க முடியவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட சுழற்சி முறை தொடர் போராட்டங்களிலும் இந்த தாய் கலந்து கொண்டிருந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments