காணாமல் போனவர் சடலமாக மீட்பு!

காணாமல் போனவர் சடலமாக மீட்பு!

பருத்தித்துறை, துன்னாலைப் பகுதியில் நேற்று முன்தினம் மாலை காணாமல் போயிருந்த நபர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கிருஷ்ணபிள்ளை சிவகுமார் என்ற 34 வயதான நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் மாலை வெளியில் சென்றிருந்த நிலையில் காணாமல் போயிருந்தார். வீட்டுக்கு அண்மையில் துன்னாலை வடக்கு மெதடிஸ்த தமிழ்க் கலவன் பாடசாலைக்குக்கு பின் பகுதியில் உள்ள ஒழுங்கையில் அவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலத்தின் நாடிப்பகுதியில் காயம் ஒன்று காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படும் நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள