காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு!

You are currently viewing காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் – பாசையூர், பூம்புகார் கடற்கரையில் இருந்து, இன்று (03) இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர், பாசையூர் பகுதியைச் சேர்ந்த சில்வெஸ்டர் சஜித் (27) என அடையாளங் காணப்பட்டுள்ளார்.கடற்றொழிலாளர்கள் நான்கு பேர், இன்று (03) அதிகாலை பூம்புகார் கடலில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். இதன்போது, இந்த இளைஞரை, ஓர் இடத்தில் நிறுத்திவிட்டு ஏனைய மீனவர்கள் மற்றோர் இடத்தில் தொழில் பார்க்கச் சென்று, திரும்பி வந்து பார்த்த போது, அவர் காணாமல் போயிருந்தார்.பின்னர், சக மீனவர்கள் சேர்ந்து, அந்த இளைஞனைத் தேடிய போது, அவ்விளைஞனின் சடலம் பூம்புகார் கடற்பகுதியில் கரையொதுங்கியுள்ளது.

பகிர்ந்துகொள்ள