காரைநகர் கடலில் 130 கிலோ கேரள கஞ்சா மீட்பு: கடற்படையினரால் இருவர் கைது!

You are currently viewing காரைநகர் கடலில் 130 கிலோ கேரள கஞ்சா மீட்பு: கடற்படையினரால் இருவர் கைது!

சட்டவிரோதமாக கடல் வழியாக கடத்தி வரப்பட்ட கேரள கஞ்சாவுடன் காரைநகர் கடலில் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக படகில் கடத்தி வரப்பட்ட 130 கிலோ கேரள கஞ்சா பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து கேரள கஞ்சா பொதிகளை படகில் கடத்தி வரப்பட்ட போது இன்று (ஜூன்-18) அதிகாலை காரைநகர் கடற்பரப்பில் வைது கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக அருவியின் பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புபட்ட இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளதாக மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments