கார்திகை மாதம் கண்ணீருடன் வாழும் மக்கள்!

கார்திகை மாதம் கண்ணீருடன் வாழும் மக்கள்!

கார்த்திகை மாதம் பிறந்தாலே அது மாவீரர்களுக்கான மாதமாக தமிழர்களால் நினைவிற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இன்று துப்பாக்கி ஏந்திய ஆயுத தாரிகளின் அடக்குமுறைக்கு மத்தியில் தாயகத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.

தங்கள் பிள்ளைகளை உறவுகளை நினைவிற்கொள்ளமுடியாத நிலையில் முதல் மாவீரன் சங்கர் சத்தியநாதன் இட்ட பாதையில் சென்ற பல ஆயிரக்கணக்கான இளைஞர் யுவதிகள் தமிழர்களின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்தார்கள்.

சிங்கள ஆட்சியின் கீழ் உள்ள சிறீலங்காவில் 2009 ஆம் ஆண்டுடன் எல்லாம் முடிந்துவிட்ட நிலையில் மாவீரர் நினைவாலயங்களில் படையினர் முகாம்களை நிறு உயிரிழந்தவர்களை நினைவிற்கூர முடியாத நிலைக்கு இன்று 2020 ஆம் ஆண்டு சிங்கள ஏகாதிபத்திய பேரினவாத அரசு மேற்கொண்டுள்ளது.

தாயகத்தில் வீதிகள் எங்கும்,மாவீரர் துயிலும் இல்லங்கள் எங்கும் துப்பாக்கி ஏந்திய சிங்கள படையினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டு மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைக்கு மத்தியில் போரில் உயிரிழந்த தங்கள் உறவுகளை நினைவிற்கூர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

மறுபுறத்தில் புலம்பெயர்ந்த மக்களுக்கு முகவரி கொடுத்த தமிழர்களின் புதல்வன் பிறந்த நாளினை கொண்டாடினாலம் புலம்பெயர் தளத்தில் உள்ள பல இலட்சத்திலான மக்களுடன் தொப்புள்கொடி உறவுகளான தமிழக உறவுகளை நினைவிற்கொள்கின்றார்கள்.

தாயகத்தில் சுடர் ஏரியாவிட்டாலும் சுட்டெரிக்கும் சூரியப்புதல்வனின் வழியில் வந்த தமிழர்கள் வாழும் நாடுகள் அனைத்திலம் மாவீர்களை நினைவிற்கொள்வார்கள் என்பதுதான் இன்றைய வரலாறு சொல்லும் செய்தி..

பகிர்ந்துகொள்ள