கார்த்திகை விளக்கீட்டை தடுத்து இந்துமதத்தை அரசு அவமதித்துள்ளது -தமிழ் கட்சிகள் கண்டனம்!

கார்த்திகை விளக்கீட்டை தடுத்து இந்துமதத்தை அரசு அவமதித்துள்ளது -தமிழ் கட்சிகள் கண்டனம்!

பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கார்த்திகை விளக்கீட்டை தடுத்து இந்துமதத்தை அவமதித்துள்ளதாக அனைத்துக் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் இல்லத்தில் அனைத்துக் கட்சியினர் ஒன்றுகூடியிருந்தனர். இதன்போதே இக் கூட்டம் தொடர்பில் பேசப்பட்டது.

கார்த்திகை விளக்கீடு அன்று அரசின் அங்கமான பொலிஸ் மற்றும் இராணுவம் இந்து மதத்தை அவமதித்துள்ளனர்.

இதற்கு எமது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். இது தொடர்பில் அரசிற்கு கடிதம் ஒன்றையும் எழுதவுள்ளோம்.

புதிய அரசியலமைப்பு திட்டத்திற்கான வரைவு தீர்மானிப்பதற்கான குழுவை முன்வைத்து. அக்குழு  உள்ளடங்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

இக் கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சரவனபவன், சிவாஜிலிங்கம், சுரேஷ் பிரேமசந்திரன்,  முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கஜதீபன், அனந்தி  ஆகியோர் கலந்து கொண்டனர்.

பகிர்ந்துகொள்ள