தமிழீழம் வவுனியா மாவட்டத்தில்
தொய்வுறாமல் 1378 நாட்கள் கடந்தும், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கேட்டு சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தாய்மார்களுக்கு 26.11.2020 வியாழன்அன்று உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
ஒவ்வொன்றும் 3000 ரூபாய் பெறுமதியான 64 உலர் உணவுப்பொதிகள்,
காணாமல் ஆக்கப்படுதல் சம்பவங்களினால் பாதிக்கப்பட்ட குறித்த 64 குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டன.
இதில் 25 குடும்பங்களுக்கு தமிழ்முரசம் பணியாளர்கள் தங்கள் பங்களிப்பை செலுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







பகிர்ந்துகொள்ள