காலம் கடந்த பின் பிறந்த ஞானங்கள்!

காலம் கடந்த பின் பிறந்த ஞானங்கள்!


தமிழர் தாயத்தில் காலம் கடந்த பின் அரசியல் ஞானம் பிறந்த பலரை இன்றைய நாளில் காணக்கூடியதாக உள்ளது.


அறம் பிளைத்தோர்கள் இன்று தங்கள் இருப்பினை தக்கவைத்துக்கொள்ள விடுதலைவீரன் ஈகைச்சுடரின் பெயரினை பயன்படுத்தியுள்ளார்கள்.


இவர்கள் எல்லாம் கடந்த காலங்களில் என்ன செய்தார்கள் என்பதை மக்களும் புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்றவர்களும் புரிந்து கொள்ளவேண்டும்.


முன்னணியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களதும் அவர்களின் கட்சியின் செயற்பாடுகளும் என்றும் கொள்கையளவில் இருந்து மாறுபடவில்லை கடந்த காலங்களில் அவர்களின் வழியில் செல்லாதவர்கள் இன்று அவர்கள் போட்ட பாதையில் பயணிக்கின்றார்கள்.


அரசாங்கத்துடன் இணைந்து பயணித்தவர்களும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட்டவர்களுக்கு எல்லாம் விடுதலைதேசியம் உணர்வு இன்று பிறந்துள்ளது.
கடந்த காலங்களில் இவர்கள் செய்யாததை அதவாது அதிகாரம் உள்ளபோது செய்யவேண்டியவற்றை செய்யாமல் இன்று அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுக்கின்றார்கள்.


தமிழ் கட்சிகளின் ஒற்றுமை என்று செல்பவர்கள் எல்லாம் இனிவரப்போகும் மாகாணசபை தேர்தலை இலக்காக கொண்டுதான் செயற்படுகின்றார்கள் இது எல்லோருக்கும் பெருத்தமானதல்ல சில அரசியல்வாதிகளை கடந்த காலங்களில் என்ன செய்தார்கள் என்று பார்த்தீர்கள் என்றால் மக்கள் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கும்.


இன்று சிங்கள அரசிற் அச்சுறுத்தலான இருவர்தான் காணப்படுகின்றார்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,செ.கஜேந்திரன் ஆகியோர்தான் இன்று அரசிற்கு சவால் விடும் அளவிற்கு மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
இவர்கள் இன்று இல்லாவிடின் எந்த ஒரு அரசியல் வாதியும் இவ்வாறு நடந்து கொள்ளமாட்டார்கள்.


இவர்கள் இருவரும் ஏதாவது செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தில்தால் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் திலீபனின் பெயர் சொல்லி தங்கள் அரசியல் பிளைப்பினை நடத்துகின்றார்கள் இன்று.


மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்று சொல்லி வீரமரணம் அடைந்த தீலீபனின் 33 ஆண்டுகள் புரையோடிபோன நிலையில் கடந்த ஒரு தசாப்தம் தமிழ் மக்கள் சிங்கள அரசின் ஆதிக்கத்தின் கீழ்தான் வாழ்தாலும் நினைவேந்தல்களை செய்தார்கள்.


வரலாறு இட்ட கட்டளையில் தமிழர்கள் பயணிக்க வில்லை என்றால் வரலாறு மாற்றி எழுதப்படும் என்பதுதான் தற்போது உள்ள உண்மை.


காலம் இரண்டு முத்துக்களை கொடுத்துள்ளது இனிவரப்போகும் காலத்தில் அந்த முத்துக்களின் வழிநடத்தலில் தமிழ்மக்கள் அணிதிரளவேண்டும் இல்லையேல் மீண்டும் மீண்டும் தமிழர்கள் நசுக்கப்படும் என்பதுதான் உண்மை.

பகிர்ந்துகொள்ள