காலி முகத்திடல் கடற்கரையில் மற்றொரு சடலம்!

You are currently viewing காலி முகத்திடல் கடற்கரையில் மற்றொரு சடலம்!

கொழும்பு – காலி முகத்திடல் கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் 40 வயது மதிக்கதக்க ஆண் ஒருவரின் சடலம் என சிறீலங்கா காவற்துறையினர் தெரிவித்தனர்.

தற்போது சிறீலங்கா காவற்துறை இந்த சடலம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

இருப்பினும் குறித்த நபரின் அடையாளம் இதுவரை இணங்காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் காலி முகத்திடல் கடற்கரையிலிருந்து மேலும் ஒரு சடலம் ஒன்று மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை

கோட்டாகோகம போராட்டக்களத்தின் முக்கியச் செயற்பாட்டாளரான சமூக செயற்பாட்டாளர் ‘ரட்டா’ எனப்படும் ரதிந்து சேனாரத்ன சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீதிமன்ற தடை உத்தரவை மீறி மே 21ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக ரட்டா கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு மத்திய குற்றத்தடுப்புப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றப் பின்னர் காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் பலர் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றமைக் குறிப்பிடத்தக்கது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments