கால்நடைகளை திருட முயன்ற சிங்களவர்கள் – தடுக்க முயன்ற தமிழர் மீது தாக்குதல்!

You are currently viewing கால்நடைகளை திருட முயன்ற சிங்களவர்கள் – தடுக்க முயன்ற தமிழர் மீது தாக்குதல்!

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய், சிவந்தாமுறிப்பு பகுதியில், தமிழ் கால்நடை வளர்ப்பாளர் ஒருவர் சிங்களவர்கள் சிலரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்.

சிங்களவர்கள் குறித்த தமிழ் கால்நடைவளர்ப்பாளருக்குச் சொந்தமான கால்நடைகளைத் திருடமுற்பட்டதாகவும், திருட்டுமுயற்சியைத் தடுக்கும்போதே தாம் அவர்களால் கட்டிவைக்கப்பட்டு தாக்கப்பட்டதாகவும் குறித்த கால்நடை வளர்ப்பாளர் தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் பகுதியில் வசித்துவரும் சிவக்கொழுந்து கந்தசாமி என்ற கால்நடை வளர்ப்பாளரே இவ்வாறு சிங்களவர்களால் தாக்கப்பட்ட நிலையில், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள குறித்த நபரை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டதுடன், நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்தார்.

அதேவேளை கொக்குத்தொடுவாய் பகுதி தமிழ் மக்களின் கால்நடைகளை வெலிஓயா பகுதியைச் சேர்ந்த சிங்களவர்கள் தொடர்ச்சியாக திருடிவருவதாக அப்பகுதி தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

அவ்வாறு திருடப்படும் போது தடுக்கின்ற தமிழ் மக்களை, பெரும்பான்மை இனத்தவர்கள் தாக்குகின்ற சம்பவங்களும் தொடர்சியாக இடம்பெற்று வருவதாகவும் அப்பகுதித் தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் இதுதொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட செயலிரிடம் கொக்குத்தொடுவாய் மக்கள் முறையிட்டுள்ளனர். மேலும் இப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வுகாணவேண்டும் என்பதே கொக்குத் தொடுவாய் தமிழ்மக்களின் கோரிக்கையாகவுள்ளது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments