காவல்துறை, இராணுவம் குவிப்பு அச்சுறுத்தல்!! தொடரும் உணவொறுப்பு போராட்டம்!

காவல்துறை, இராணுவம் குவிப்பு அச்சுறுத்தல்!! தொடரும் உணவொறுப்பு போராட்டம்!

தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி சாவகச்சோி சிவன் கோவில் முன்றலில் தமிழ்தேசிய கட்சிகள் இணைந்து உணவொறுப்பு போராட்டத்தை நடாத்தி வருகின்றனர். 

இந்நிலையில் போராட்டம் நடைபெறும் இடத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அவ்விடத்தில் பத்திரிகை வாசிக்க முடியாது என சில்லநைத்தனமான சீண்டல்களிலும் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்

மேலும் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு சற்று தொலைவில் பிரதான வீதியை அண்மித்து படையினர் களமிறக்கப்பட்டிருக்கின்றனர். 

இவற்றின் ஊடாக ஒரு அச்சுறுத்தலை உண்டாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எனினும் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் தொடர்ச்சியாக அமைதியான முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments