காவல்துறை விசாரணை : இஸ்ரேலுக்கான சீனத் தூதர் மர்ம மரணம்!

காவல்துறை விசாரணை : இஸ்ரேலுக்கான சீனத் தூதர் மர்ம மரணம்!

இஸ்ரேலுக்கான சீனத் தூதர் Du Wei (58), மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கான சீனத் தூதர் Du Wei (வயது 58) பிப்ரவரி மாதம் கொரோனா வைரஸ் தொற்றுநோய்ப் பரவலுக்கு மத்தியில் இஸ்ரேலின் தூதராக நியமிக்கப்பட்டார்.

அவர் முன்பு உக்ரைனுக்கான சீனாவின் தூதராகப் பணியாற்றினார். இந்தநிலையில், டெல் அவிவ் நகரத்தின் வடக்கே (Herzilya) உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தூதரின் திடீர் மரணத்திற்கான காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக இஸ்ரேலிய காவல்துறையினர் தெரிவித்தனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments