கியூபாவில் 43 ஆண்டுகளுக்கு பின் புதிய பிரதமர் நியமனம்!

கியூபாவில் 43 ஆண்டுகளுக்கு பின் புதிய பிரதமர் நியமனம்!

அமெரிக்காவின் அண்டை நாடு கியூபா. சுமார் 90 ஆண்டுகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தில் இருந்த கியூபா, பிடல் காஸ்ட்ரோ, சே குவேரா ஆகியோர் தலைமையில் நடந்த மாபெரும் கியூபா புரட்சிக்குப் பின் விடுதலை ஆனது.
இதனையடுத்து 1959ஆம் ஆண்டு கியூபாவின் முதல் பிரதமராக பிடல் காஸ்ட்ரோ பதவியேற்றார். 1976ம் ஆண்டு கியூபாவின் அதிபரானார். 2008ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்குப் பின் அவரது இளைய சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ அதிபர் பொறுப்பை ஏற்றார்.

சுமார் 10 ஆண்டுகள் அதிபர் பதவியில் வகித்து வரும் ரவுல் காஸ்ட்ரோ 87 வயதில் பதவியிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார். இதனையடுத்து அதிபர் பதவிக்கு துணை அதிபர் மிக்வெல் டயாஸ் கனல் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் டயாஸ் போட்டியின்றி அதிபரானார்.
இதற்கு முன் 1959 முதல் 1976 வரை பிடல் காஸ்ட்ரோ கியூபா பிரதமராக இருந்துள்ளார். அவருக்குப் பின் அந்நாட்டு அரசியலமைப்பில் பிரதமர் பதவி நீக்கப்பட்டு, அதிபருக்கே அனைத்து அதிகாரங்களும் அளிக்கப்பட்டு இருந்தன.  இதனால் கடந்த 43 ஆண்டுகளாக யாரும் பிரதமராக நியமிக்கப்படவில்லை.
கடந்த பிப்ரவரி மாதம் கியூபாவின் புதிய அரசியலமைப்பு சட்டத்தில் அதிபரின் பணிச்சுமையை குறைக்கும் அம்சம் சேர்க்கப்பட்டது. அதன்படி, அதிபர் மிக்வெல் டயாஸ் கனல்,  சுற்றுலாத்துறை மந்திரி மானுவல் மார்ரீரோ க்ரூஸை 5 ஆண்டுகளுக்கு பிரதமராக நியமித்துள்ளார்.  இந்த முடிவுக்கு கியூபா தேசிய சபையும் ஒப்புதல் அளித்துள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of