கிராம உத்தியோகத்தரின் கொலையைக் கண்டித்து கவனயீர்ப்பு!

கிராம உத்தியோகத்தரின் கொலையைக் கண்டித்து கவனயீர்ப்பு!

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான  பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த இலுப்பைக்கடவை கிராம அலுவலரின் கொலையைக் கண்டித்தும், படுகொலைக்கு நீதி வேண்டியும், குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும் எனக்  கோரியும் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பணியாளர்கள் இன்று (06) காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாந்தை மேற்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற இக்கவனயீர்ப்பு போராட்டத்தில், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ். கேதீஸ்வரன், உதவி பிரதேச செயலாளர், மாந்தை மேற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாந்தை மேற்கில் கடமையாற்றும் கிராம அலுவலகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர் போராட்டத்தில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள், கொலை செய்யப்பட்ட கிராம அலுவலரின் மரணம் தொடர்பில் பொலிஸ் மாஅதிபர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு கொலைகாரர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனவும், ஏனைய அரச உத்தியோகத்தர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்தனர்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments