கிளாலிக் கடற்படைத்தளத்தின் மீதான தாக்குதலில், காவியமான இன்றைய விடுதலைதீபங்கள்!!

கிளாலிக் கடற்படைத்தளத்தின் மீதான  தாக்குதலில், காவியமான இன்றைய விடுதலைதீபங்கள்!!

25.02.1998 அன்று கிளாலிக் கடற்படைத்தளத்தின் மீதான அதிரடித் தாக்குதல் ஒரு பார்வை.!

கிளாலிக் கடற்படைத்தளத்தின் மீதான தாக்குதலில், காவியமான இன்றைய விடுதலைதீபங்கள்!! 1

தமிழீழத் தாயகம் மீட்டெடுக்க 25.02.1998   அன்று  கிளாலிக் கடற்படைத்தளத்தின் மீதான அதிரடித் தாக்குதல் களமாடி வீரகாவியமான எமது மாவீரர்களிற்கு  எமது  வீரவணக்கத்தினை செலுத்துவோம்…..


பூநகரி கேரதீவுப்பகுதி மற்றும் அதனை அண்டியுள்ளபகுதியிலிருந்து கடற்தொழில் ஈடுபட்ட மக்கள்மீது கிளாலிக் கடற்படைத்தளத்திலிருந்து வந்த கடற்படையினர் தொடற்சியான தாக்குதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.அதுமட்டுமல்லாமல்  வன்னிப்பகுதியிலிருந்து யாழ்குடாநாட்டிற்க்குள் கடல்வழிமூலம் செல்லும் போராளிகளுக்கும் இக்கடற்படையினர் பாரிய அச்சுறுத்தலாகவும் இருந்தனர் .இது சம்பந்தமான அனைத்து விடயங்களை  தளபதிகள் தலைவர் அவர்களிடம் தெரிவித்தனர்.தலைவர் அவர்கள் இதுசம்பந்தமான அனைத்துத் தகவல்களையும் ஆராய்ந்தார்.இத்தாக்குதலானது கடலிலும் அதேசமயம் தரையிலும் இறங்கித்தாக்குதலையும் நடாத்தி கடற்படைக்கலங்களையும அழிக்கவேண்டும் அப்படியானால் தான் கொஞ்சக்காலமாவது எந்தவொருதொந்தரவும் கிளாலிக் கடற்படையால் இருக்காது.அதற்கான வேலையில் ஈடுபட்ட தலைவர் அவர்கள் அதற்கான திட்டத்தைதீட்டி தளபதி ராயு  அவர்களிடம்( கேணல் ராயூ வீரச்சாவு 25.08.2002) கொடுத்து  இத்தாக்குதலின் முக்கியத்தவத்தையும் கூறினார்.அந்தகாலப்பகுதியில் ஈரூடகப்படையணி தளபதி ராயூ அவர்களின் தலைமையில் செயற்பட்ட கடற்சிறுத்தைபடையணியாகும்

தலைவர் அவர்கள் கொடுத்த திட்டத்தையும் அதன் முக்கியத்தவத்தையும் உணர்ந்து விரைவாகச் செயற்பட்டு மேஐர் அன்புமனி அவர்கள் தலைமையிலான அணிகளின் வேவுத்தரவுகளை மிகவும் துல்லியமாக சேகரித்துக்கொடுத்தனர் . அதற்கமைவாக  பயிற்சிகள் நடைபெற்றன .

பயிற்சிகள் நிறைவு பெற்று தாக்குதல் திட்டம் தளபதி ராயூ அவர்களால் விளங்கப்படுத்தப்பட்டது .அதற்கமைவாக 25.02.1998 அன்று நள்ளிரவு 

மேஐர் குயிலன் தலைமையிலான அணிகள் படகுகளில் கொண்டுசென்று கிளாலிக்கடற்படைத்தளத்திலிருந்து இரண்டு கடல்மைல் தொலைவிலிருந்து இறக்கவிடப்பட்டார்கள். அவர்கள் நீந்திச்சென்று கிளாலிக்கடற்படைத் தளத்தில் தாக்குதலை நடாத்திக்கொண்டிருக்கும் அதேசமயம் அங்கு கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கடற்படைக்கலங்கல் மீதும் தாக்குதல்களைநடாத்தி அக்கலங்கலை அழிப்பதுமாகும்.

அதே சமயம் கிளாலிகடலநீரேரியில் ஆனையிறவிலிருந்து கடல்வழிஉதவிகள் வராமல் தடுப்பதற்காகவும் மேஐர் குயிலன் தலைமையிலான அணிகளைக் கொண்டு சென்று இறக்கி அவர்களைக் திரும்ப தளத்திற்க்குக் கொண்டுவரும் பணிகளை மேஐர் சுருளி தலைமையிலான படகுத்தொகுதியினர் செவ்வனவே செய்தனர்.இக்கடல் நடவடிக்கைகளை கடற்சிறுத்தைத் தளபதி  லெப்.கேணல் சேரமான் அவர்கள் செவ்

வனவே வழிநடாத்திக்கொண்டிருந்தார்.

கிளாலிக்கடற்படைத்தளம் மீது தாக்குதல்  நடாத்திக் கொண்டிருக்கும் அதேசமயம் இவ்வணியினருக்கு பக்கபலமாக கேணல் கிட்டுப் பீரங்கிப்படையினரும் தமது சூட்டாதரவை வழங்கி

படையினரின் இனங்காணப்பட்ட பலஇலக்குகள்மீது தமது துல்லியமான தக்குதல்மூலம் சிறிலங்காப் படையினரைத் திணறவைத்தனர்.

இவ்வெற்றிகரத்தாக்குதலில் பலபடையினர் கொல்லப்பட்டும்  பன்னிரன்டிற்க்கும் மேற்பட்ட கடற்படையினரின் கலங்கள் முற்றுமுழுதாக அழிதொழிக்கப்பட்டன.இவ்வெற்றிகரத்தாக்குல்கள் அனைத்தையும் ஒருங்கினைத்து தளபதி ராயூ அவர்கள் செவ்வனவே வழிநடாத்தியிருந்தார்.

இவ்வெற்றிகர அதிரடித்தாக்குதல்களில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

இக்கடற்படைத்தளமீதான தாக்குதலில் பங்கேற்று  கையில் காயமடைந்த  கடற்சிறுத்தைப்பெண்போராளி மறுநாள் நீந்தி தளம் திரும்பியிருந்தார்.

இவ்வெற்றிகரத் தாக்குதலில் 

கிளாலிக் கடற்படைத்தளத்தின் மீதான தாக்குதலில், காவியமான இன்றைய விடுதலைதீபங்கள்!! 2
கிளாலிக் கடற்படைத்தளத்தின் மீதான தாக்குதலில், காவியமான இன்றைய விடுதலைதீபங்கள்!! 3
கிளாலிக் கடற்படைத்தளத்தின் மீதான தாக்குதலில், காவியமான இன்றைய விடுதலைதீபங்கள்!! 4

கடற்சிறுத்தை மேஐர் .குயிலன் .

கடற்சிறுத்தை கப்டன். சூரியன்.

கடற்சிறுத்தை கப்டன்.ஜெயந்தன்.

ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.

மூலம் :-அன்றைய இச்சம்பவத்தில் பங்கேற்றவரின் உள்ளத்திலிருந்து..

தாயக விடுதலை வேண்டி   தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்!

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

பகிர்ந்துகொள்ள