கிளிநொச்சியிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!

கிளிநொச்சியிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினால் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலை அருகாமையில் உள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்திற்கான அலுவலகம் முன்பாக ஏ9 வீதியில் இடம்பெற்றது.

சிறுவர் தினமான இன்று இறுதி யுத்த காலத்தில் சிறுவர்கள் கொல்லப்பட்டமை மற்றம் காணாமல் ஆக்கப்பட்டமையை சர்வதேசத்திற்கு எடுத்து கூறும் வகையில் குறித்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதேவேளை இன்றைய போராட்டம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கு மகயர் ஒன்று மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி கலாரங்சினி தெரிவித்துள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments