கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்துக்களில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு!

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்துக்களில் இரண்டு இளைஞர்கள் உயிரிழப்பு!

பூநகரி பகுதியில் நடந்த விபத்துச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
டிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கில் மோதினாலேயே மேற்படி விபத்துச் சம்பவம் நடந்துள்ளது.

இச் சம்பவத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் வீதியில் இடம்பெற்ற விபத்தின் போது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்வேகக்கட்டுப்பாட்டை இழந்த உந்துருளி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் கிளிநொச்சி பாரதிபுரத்தினை சேர்ந்த 19 அகவையுடைய இளைஞன் உயிரிழந்துள்ளதுடன் இவரின் உடலம் கிளிநொச்சி மாவட்ட மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments