கிளிநொச்சியில் இருந்து கடத்தப்பட்ட 20 கிலோ கஞ்சா வவுனியாவில் சிக்கியது!

கிளிநொச்சியில் இருந்து கடத்தப்பட்ட  20 கிலோ கஞ்சா வவுனியாவில் சிக்கியது!

வாகனம் ஒன்றிற்குள் சூட்சுமமான முறையில் மறைத்துவைக்கப்பட்டு கடத்திச்செல்லப்பட்ட  20 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவரை கைதுசெய்யதுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

(வியாழக்கிழமை) காலை 10 மணியளவில் கிளிநொச்சியில் இருந்து தம்புள்ளை நோக்கி கஞ்சா கடத்தப்படுவதாக வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, வவுனியா புதிய பேருந்து நிலையத்துக்கு முன்பாக சோதனை நடவடிக்கையை மேற்கொண்ட பொலிசார் 20 கிலோ கேரளகஞ்சாவினை கைப்பற்றியதுடன், அதனை கடத்திச்செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட கப் ரக வாகனத்தையும், கார் ஒன்றினையும் மீட்டுள்ளனர்.

குறித்த கடத்தல்நடவடிக்கை பொலிஸாரை திசைதிருப்பும் விதமாக சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்ததுடன், கஞ்சா வைக்கப்பட்டிருந்த கப் ரக வாகனத்திற்கு  பாதுகாப்பை வழங்கும் நோக்குடன் அதற்கு முன்பாக கார் ஒன்றினையும் கடத்தல் காரர்கள்செலுத்தி சென்றுள்ளனர்.

சம்பவத்தில் பொலநறுவை பகுதியை சேர்ந்த 31 வயதுஇளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதி மன்றில் ஆயர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments