கிளிநொச்சியில் உணவின்றி இறக்கும் மாடுகள்!

You are currently viewing கிளிநொச்சியில் உணவின்றி இறக்கும் மாடுகள்!

கிளிநொச்சி கோணாவில் கிராமத்தில் 500 மாடுகளை வளர்த்து வளரும் தங்கவேலுசுரேந்திரனின் மாடுகள் போதுமான உணவின்றி நாளாந்தம் இறந்து வருவதாகவும்,சேலைன் ஏற்றியும் மாடுகளை காப்பாற்ற முடியவில்லை எனவும் மிகவும்
வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் மாடுகளை வளர்ப்பதற்குரிய மேச்சல் தரைகள்இன்மையால் தனது மாடுகளுகு்கு போதுமான உணவு கிடைப்பதில்லை என்றும் இதனால் தற்போது சில நாட்களுக்குள் எட்டு மாடுகள் வரை இறந்து விட்டது என்றும்
போதுமான உணவின்றி பசியால் நடக்க முடியாத நிலையில் உள்ள மாடுகளுக்குசேலைன் ஏற்றி வருவதாகவும், ஆனாலும் சேலைன் ஏற்றப்பட்ட மாடுகளிலும்சிலவும் இறப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள