கிளிநொச்சியில் உயிரிழந்த யாசகரின் உடமையில் ஒருலட்சத்திற்கும் அதிமான பணம்!

கிளிநொச்சியில் உயிரிழந்த யாசகரின் உடமையில் ஒருலட்சத்திற்கும் அதிமான பணம்!

கிளிநொச்சி நகரில் யாசகம் பெற்றுவந்த முதியவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருடைய உடமையில் இருந்து சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் மீட்கப்பட்டிருக்கின்றது. 

மாவட்ட வைத்தியசாலையில் கடந்த 3 நாள்களாக சிகிச்சை பெற்றுவந்த இவர், இன்று உயிரிழந்துள்ளார்.இந்த நபர் கிளிநொச்சி நகரத்தில் யாசகம் பெற்றுவருபவர் என்று தெரியவருகின்றது. 

அவர் உயிரிழந்த பின்னர் அவரது உடமைகளை ஆராய்ந்தபோது, அதற்குள் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபா பணம் இருந்துள்ளது.இவரது உறவினர்கள் எவரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில் 

உடல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments