கிளிநொச்சியில் கலைஞனின் விடுதலைக்காக எழுச்சி கொண்ட மக்கள் போராட்டம்!

You are currently viewing கிளிநொச்சியில் கலைஞனின் விடுதலைக்காக எழுச்சி கொண்ட மக்கள் போராட்டம்!

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட பாடகரான சங்கீர்த்தனனின் விடுதலையை வலியுறுத்தி இன்று கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டம் நடைபெற்றுள்ளது.

கிளிநொச்சியில் கலைஞனின் விடுதலைக்காக எழுச்சி கொண்ட மக்கள் போராட்டம்! 1

தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடைய உள்ளடக்கத்தைக்கொண்ட பாடலைப் பாடினார் என்ற குற்றச்சாட்டில் பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த பாடகரான சங்கீர்த்தனன் (24) யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படும் எனத் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதியளித்த அரசாங்கம், இன்னமும் அவ்வாக்குறுதியை நடைமுறைப்படுத்தாத நிலையில், பயங்கரவாதத்டைச்சட்டத்தின் கீழ் இடம்பெற்றிருக்கும் இக்கைது குறித்து அரசியல் பிரதிநிதிகள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர்.

இந்நிலையில் அரச பயங்கரவாதத்தினால், பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட கலைஞனை விடுவிக்குமாறு வலியுறுத்தி இன்று சனிக்கிழமை (6) கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப்போராட்டம் நடைபெற்றுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply