கிளிநொச்சியில் குடும்பத்தலைவி வெட்டிக்கொலை!

கிளிநொச்சியில் குடும்பத்தலைவி வெட்டிக்கொலை!

கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட தெளிகரை பகுதியில் குடும்ப பெண் ஒருவர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்
குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பூநகரி சிறீலங்கா காவல்த்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்
பூநகரி தெளிகரை பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் வைத்து குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், வயிற்று பகுதியில் வெட்டு காயங்களுடன் குறித்த பெண்ணின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்த்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவத்தில் 37 வயதுடைய ரூபஸ் கிருஸ்ணகுமாரி என்ற 3 பிள்ளைகளின் தாய் உயிரிழந்துள்ளதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்
குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் காவல்த்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்ப இடத்திலிருந்து கூரிய ஆயுதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்த்துறையினர் மேலும் தெரிவிக்கின்றனர்.


உயிரிழந்த பெண்ணின் சடலம் நீதவான் பார்வையிட்டதன் பின்னர் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படும் எனவும் காவல்த்துறையினர் மேலும் தெரிவிக்கின்றனர்
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி சிறீலங்கா காவல்த்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள