கிளிநொச்சியில் சுமந்திரனுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள்!

கிளிநொச்சியில் சுமந்திரனுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள்!

கிளிநொச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்ஏ.சுமந்திரனுக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் நேற்று வீதியில் வீசப்பட்டுக் கிடந்தன. அதிகாலை, கிளிநொச்சியின் வீதியெங்கும், இந்தத் துண்டுப் பிரசுரங்கள் காணப்பட்டன.

“வேண்டாம் சுமந்திரன்” எனும் தலைப்பில், “தமிழர்களின் தியாகத்தைக் கொச்சைப்படுத்திய சுமந்திரனை தோற்கடிப்போம்” என, அந்தத் துண்டுபிரசுரத்தில் எழுதப்பட்டுள்ளது.

இந்தத் துண்டுப் பிரசுரத்தின் கீழே, தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் கிளிநொச்சி மக்கள் என உரிமைக் கோரப்பட்டுள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments