கிளிநொச்சியில் நபர் ஒருவர் கைது!

கிளிநொச்சியில் நபர் ஒருவர் கைது!

கிளிநொச்சியில் கல்மடு பிரதேசத்தில் யானை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில், நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு (26) வயலொன்றுக்குள் புகுந்த யானை, காலையில் அங்கு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. இதுத் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார், வனஜீவராசிகள் திணைக்களத்தினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் இணைப்பில் சிக்கி யானை உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இதுத் தொடர்பில் கல்மடு பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பகிர்ந்துகொள்ள