கிளிநொச்சியில் நாட்டு துப்பாக்கியுடன் மூவர் கைது!

கிளிநொச்சியில் நாட்டு துப்பாக்கியுடன் மூவர் கைது!

கிளிநொச்சியில் வெடிமருந்து மற்றும் உள்ளுர் துப்பாக்கிகளுடன் 3 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். 

தர்மபுரம் பொலிஸ் பிவிரிற்குட்பட்ட மாயவனுார் பகுதியில் உள்ளுர் துப்பாக்கிகள் வைத்திருத்தல் மற்றும் துப்பாக்கிகள் செய்வது தொடர்பில் 

அரச புலனாய்வு பிரிவினருக்கி கடைத்த ரகசிய தகவலிற்கு அவை மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அரச புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக் விசேட அதிரடிப்படையினரும்.  அரச புலனாய்வு பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடி்கையின்போது 

இவை மீட்கப்பட்டுள்ளன. இதன்போது 710 கிராம் ரி 56 துப்பாக்கி ரவை மருந்தும், இரண்டு உள்ளுர் துப்பாக்கிகள், 450 கிராம் ஈயகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. 

சம்பவத்தில் வெடிமருந்து வைத்திருந்த நபரும், துப்பாக்கி வைத்திருந்த நபரும் அதேவேளை துப்பாக்கி ஒன்றை செய்து குறையில் மற்றுமொருவருமாக 

மூவர் விசேட அதிரடி்படையினர் கைது செய்துள்ளனர். கைதான மூவரும் குடும்பத்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான வழக்கினை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் தொடுக்க உள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்.

பகிர்ந்துகொள்ள