கிளிநொச்சியில் படையினர் ஆதார மருத்துவமனை திறந்து வைப்பு!

கிளிநொச்சியில் படையினர் ஆதார மருத்துவமனை திறந்து வைப்பு!

கிளிநொச்சி இரணைமடு பகுதியில் இராணுவ ஆதார வைத்தியசாலையினை திறந்து வைத்தார் சிறீலங்கா படை தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா.

இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இன்று 17-07-2020 கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டு காலை பதினொரு மணிக்கு இரணைமடு படைத்தலைமையகத்தில் இராணுவத்தினருக்கான ஆதார வைத்தியசாலையினை திறந்து வைத்துள்ளார்.

வடக்கில் படை முகாம்களை பலப்படுத்தும் நடவடிக்கையிலும் படையினரின் கட்டமைப்புக்களை விரிவுபடுத்தி படையினரை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கிலும் சிறீலங்கா படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.
இது முற்றாக படையினரை வடக்கில் நிலைகொள்ளசெய்வதற்கான செயற்பாடுகளில் ஒன்றாக அமைந்துள்ளது.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments