கிளிநொச்சியில் பட்டப்பகலில் இளைஞன் வெட்டிக்கொலை!

கிளிநொச்சியில் பட்டப்பகலில் இளைஞன் வெட்டிக்கொலை!

கிளிநொச்சி – முழங்காவில் பகுதியில் கூரிய ஆயுதத்தினால் குத்தி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கின்றார். 

குறித்த சம்பவம் இன்று காலை 10 மணியளவில் பல்லவராயன் கட்ட சோலை மாதிரி கிராம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

இச்சபம்பவத்தின்போது செல்வரத்தினம் பிரதீபன் என்ற 32 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். 

உயிரிழந்தவரின் சடலத்தின் கழுத்து பகுதியில் முறிவுகள் காணப்படுவதாகவும். கால் பகுதியில் வெட்டுக்காய்கள் காணப்படுவதாகவும் பொலிசார் குறிப்பிடுகின்றனர்.

சடலம் முழங்காவில் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. 

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் முழங்காவில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள