கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!!

கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம்!!

கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க அலுவலகம் முன்பாக இடம்பெற்றது.

மாதாந்தம் 30ம் திகதி குறித்த போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இன்றுடன் தொடர் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 1863 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று குறித்த 30ம் திகதி கவன ஈர்ப்பு போராட்டமாக அவர்கள் முன்னெடுத்திருந்தனர்.

உறவுகளை தொலைத்த எமக்கு சர்வதேசமும், ஐக்கியநாடுகள் சபையும் நீதியை பெற்றுத்தர வே்ணடும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்திருந்தனர்.கி

பகிர்ந்துகொள்ள