கிளிநொச்சியில் வாகன விபத்தில் 21வயது இளைஞர் உயிரிழப்பு!

You are currently viewing கிளிநொச்சியில் வாகன விபத்தில் 21வயது இளைஞர் உயிரிழப்பு!

கிளிநொச்சி A9வீதி தொண்டமாநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 21வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை (12) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களுடன் பயணித்த இரண்டு பாரஊர்திகள் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பாரஊர்தியை வீதியில் நிறுத்தி பொருட்களை இறக்க முற்பட்டவேளை பின்னால் வந்த பார ஊர்தி மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் பாரஊர்தியின் உதவியாளரான 21வயதான சத்தியராசா சஞ்சயன் என்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.

மேலும், 28 வயதான சாரதி படுகாயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலை அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி சிறீலங்கா காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply