கிளிநொச்சியில் 10 மாணவர்கள் உள்ளிட்ட 46 பேருக்கு தொற்று!

You are currently viewing கிளிநொச்சியில் 10 மாணவர்கள் உள்ளிட்ட 46 பேருக்கு தொற்று!

கிளிநொச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மட்டும் பாடசாலை மாணவர்கள் 10 பேர் உட்பட மொத்தம் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அக்கராயன்குளம், புதுமுறிப்பு, விவேகானந்தா நகர், ஆனந்த நகர், செல்வபுரம், பொன்நகர், வட்டக்கச்சி மற்றும் முழங்காவில் ஆகிய பிரதேசங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட தொற்றுநோயியல் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று மட்டும் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பளை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே வீதிகளில் நடமாடுவோர், பொது இடங்களுக்கு செல்வோர், பேருந்துகளில் பயணிப்பவர்கள் மற்றும் பொது சந்தைகளுக்கு செல்பவர்கள் முகக்கவசங்கள் அணிந்து சுகாதார விதிமுறைகளை பின்பற்ற மாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments