கிளிநொச்சி காட்டிற்குள் பிறந்தநாள் கொண்டாடிய ஆவாகுழு 30 பேர்கைது!

கிளிநொச்சி காட்டிற்குள் பிறந்தநாள் கொண்டாடிய ஆவாகுழு 30 பேர்கைது!

ஆவா குழுவின் முக்கியஸ்தர் என பொலிஸாரால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளவரும் தற்போது பிரான்ஸில் வசித்து வருபவருமான “சன்னா” என்பவரின் பிறந்தநாளை கொண்டாடிய 30 இளைஞர்களை, பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கிளிநொச்சி – அக்காராயன் குளத்தை அண்டிய காட்டுப்பகுதி ஒன்றில், ஜூன் 12ஆம் திகதியன்று ஒன்றுகூடிய சில இளைஞர்கள், “சன்னா” என்ற பெயரும் அதன் அருகில் கஜேந்திரா கோடரியின் உருவமும் பொறிக்கப்பட்ட கேக்கை வெட்டி, அவரது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அவ்விடத்தைச் பொலிஸார் சுற்றி வளைத்த போது, பலர் தப்பி சென்ற நிலையில், 30 பேரை பொலிஸார் மடக்கிப்பிடித்து கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை, மறுநாள் (13) கிளிநொச்சி நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்கள் விளிக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments