கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தலைவிக்கு தடை!

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தலைவிக்கு தடை!

கிளிநொச்சியில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் தலைவி க.கோகிலவாணிக்கு போராட்டம் நடத்த தடைவிதித்த நீதிமன்ற கட்டளையை கிளிநொச்சி காவல்த்துறையினர் வழங்கியுள்ளனர்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினர் வாயில் கருப்பு துணி கட்டியபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இதையடுத்து, அந்த பகுதியில் பெருமளவு சிறீலங்கா காவல்த்துறையினர், புலனாய்வாளர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

பகிர்ந்துகொள்ள