கிளிநொச்சி காதல் ஜோடிகளின் தற்கொலைக்கான காரணம்; சாதி வெறியா!!

கிளிநொச்சி காதல் ஜோடிகளின் தற்கொலைக்கான காரணம்; சாதி வெறியா!!

கிளிநொச்சி – பரந்தன், ஓசியர் சந்திப் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் காதல் ஜோடியொன்றின் சடலம் இன்று (10) காலை மீட்கப்பட்டுள்ளது.

இருவரும் ஒன்றாக தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டிருந்தனர்.

கடந்த 4ம் திகதி முதல் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பரந்தனைச் சேர்ந்த இளைஞர் இலங்கை மின்சார சபையில் ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டவர் அடிப்படையில் பணியாற்றும் சுசிதரன் (28) இரத்தினபுரத்தைச் சேர்ந்த அண்மையில் பட்டதாரி நியமனத்தின்படி கிளிநொச்சி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் தனுஷியா (27) ஆகியோரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளது.

இருவரும் பல வருடங்களாக காதலித்து வந்த நிலையில், குடும்பங்களின் எதிர்ப்பு காரணமாகவே தற்கொலை செய்து கொண்டிருக்கலாமென உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றும், திருமணத்திற்கு பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு இருந்து வந்ததாகவும், உயிரழந்தவர்களின் நெருங்கிய நண்பர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்ய வேண்டுமென இருவரும் சில காலம் காத்திருந்ததாகவும், அது முடியாமல் போனதாகவும் நண்பர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், அவர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கவில்லை, அது பற்றி யாருடனும் பேசவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

காதல் ஜோடியின் உயிரிழப்பிற்கு சமூக முரண்பாடுதான் காரணமா என்பது உறுதியாக தெரிய வரவில்லை. பொலிசாரின் விசாரணையின் பின்னரே அது உத்தியோகபூர்வமாக தெரிய வரும்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments