கிளிநொச்சி கிணற்றில் பாயில் சுற்றிய ஆணின் சடலம்!

You are currently viewing கிளிநொச்சி கிணற்றில் பாயில் சுற்றிய ஆணின் சடலம்!

கிளிநொச்சி – இரத்தினபுரம் பகுதியில் பராமரிப்பு இன்றிய கிணறு ஒன்றில் ஆண் ஒருவருடையது எனச் சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று காணப்படுகின்றமை தொடர்பில் சிறீலங்கா காவல்த்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரத்தினபுரம் பகுதியில் பராமரிப்பு இன்றிக் காணப்படுகின்ற குறித்த காணிக்கு காணி உரிமையாளர்கள் சென்ற போது, கிணற்றினுள் பாய் ஒன்றினால் சுற்றியவாறு சடலம் ஒன்று காணப்பட்டமை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

சம்பவத்தை அடுத்து அங்கு சென்ற சிறீலங்கா குற்றவியல் காவல்த்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கிணற்றினை அண்மித்த பகுதியில் சில தடயங்கள் காணப்படுவதாலும் சடலம் பாயினால் சுற்றிக்காணப்படுவதாலும் குறித்த நபர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருப்பதாக தெரியவருகிறது.

இன்று தடயவியல் சிறீலங்கா காவல்த்துறையினர் விசாரணைகளை மேற்கொள்வார்கள் என்று காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, மாவட்ட நீதிபதி சடலத்தை பார்வையிட்ட பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி கிணற்றில் பாயில் சுற்றிய ஆணின் சடலம்! 1
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments