கிளிநொச்சி குண்டுவெடிப்பில் காயமடைந்தவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி குண்டுவெடிப்பில் காயமடைந்தவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி- இயக்கச்சி பகுதியில் வீடு ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த முன்னாள் போராளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

கடந்த சில நாட்களுக்கு முன்னர் குறித்த நபருடைய வீட்டில் பாரிய குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றிருந்தது. இதனையடுத்து படுகாயமடைந்த த.தேவதாசன் என்ற 43வயதான குடும்பஸ்த்தர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

பின்பு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் இன்று அதிகாலை அவர் உயிரிழந்துள்ளார். 

மேலும் குறித்த சம்பவத்தையடுத்து உயிரிழந்தவரின் மனைவி மற்றும் இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதுடன் மேலும் பலர் விசாரணைக்குட்படுத்த்தப்பட்டுவருகின்றனர். 

இதேபோல் குண்டுவெடிப்பு இடம்பெற்ற வீட்டில் வெடிபொருட்கள், வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள், கரும்புலிகள் நாள் பதாகை உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு தரப்பு கூறியுள்ளது. 

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments