கிளிநொச்சி குண்டு வெடிப்பு மூன்றாவது நபரும் கைது!

கிளிநொச்சி குண்டு வெடிப்பு மூன்றாவது நபரும் கைது!

கிளிநொச்சி மாவட்டம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட பளை வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொருவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பொருட்கள் மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை அடுத்து வெடிப்புசம்பவத்தில் காயமடைந்தவரின் மனைவியான பெண் ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த பெண் ஆசிரியை சட்ட ரீதியாக திருமணமாகாது குறித்த நபருடன் வாழ்ந்து வந்திருந்தார்.

குற்ற செயல் ஒன்றுக்கு ஒத்துழைப்பு வழங்கியமை மற்றும் தடய பொருட்களை அழிக்க முற்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் குறித்த ஆசிரியை பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவ்வாறான நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் நேற்று இரவு கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர் படையினரால் கைது செய்யப்பட்டு இன்று பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த இரத்தினசிங்கம் கமலகரன் என்ற 40 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான குடும்பஸ்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் கிளிநொச்சி சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

5 1 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments