நீருக்கு இரையாகும் எமது உறவுகளின் சோகம்!

You are currently viewing நீருக்கு இரையாகும் எமது உறவுகளின் சோகம்!

கிளிநொச்சி புது ஐயங்கன்குளத்தில் நீராடச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தையைக் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட மலையாளபுரத்தின் புது ஐயங்கன்குளத்தில் நீராடச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை நீரில் மூழ்கிய நிலையில் நேற்று காணாமல் போயுள்ளார்.

நேற்று பிற்பகல் குறித்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

தனது ஒரு பிள்ளையுடன் அவர் குளத்தில் நீராடிக்கொண்டிருந்ததாகவும் அதன் போது அவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாகவும் அயலில் உள்ள மக்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்ட நேரமாக தேடியும் அவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர் பொன்னகர் வடக்கு பகுதியைச் சேர்ந்த முத்துலிங்கம் அருமைநாதன் (வயது 40) என்று தெரியவந்துள்ளது.

இதேவேளை

வவுனியா கற்குழி பகுதியில் தனிமைப்படுத்தலிற்குட்படுத்தி இருந்த நபர் இன்று கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் உட்பட அவரின் குடும்பத்தினர் அண்மையில் தனிமைப்படுத்தலிற்கு உள்ளாக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை வீட்டிலிருந்த அவரை காணாமல் அவரது உறவினர்கள் தேடியுள்ளனர்.

இதன்போது கிணற்றில் சடலமாக கிடந்தமை கண்டறியப்பட்டது. கற்குழி பகுதியை சேர்ந்த கணேசன் இளங்குமரன் என்ற நபரே மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments