கிளிநொச்சி மாவட்டத்தில் 2வது நபருக்கு கொரோனா தொற்று!

கிளிநொச்சி மாவட்டத்தில் 2வது நபருக்கு கொரோனா தொற்று!

யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று நடத்தப்பட்ட 337 பேருக்கான பீ.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது.

இதன்படி கிளிநொச்சி- ஜெயபுரம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

தொற்றுக்குள்ளான நபர் கொழும்பை சொந்த இடமாகக் கொண்டவர். தற்போது மணமுடித்து ஜெயபுரத்தில் இருந்தாலும் தொழில்வாய்ப்பு நிமித்தமாக கொழும்பில் இருப்பவர். 

கடந்த மாதம் 25ம் திகதியன்று ஜெயபுரத்தில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு வந்தவர்.  வீடு திரும்பிய நாளில் இருந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.

ஏனையவர்களுக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. எனவும் பணிப்பாளர் கூறியுள்ளார்.

0 0 vote
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments